எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ

Last Updated : Oct 21, 2017, 09:41 AM IST
எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ  title=

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது மாட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. ராஜஸ்தான் அணியில் இருந்த போது சூதாட்டப்புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாழ்நாள் தடை விதிப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்திற்கு எதிராக குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தது. இருந்தாலும் பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

பிசிசிஐ-யின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீசார் கேரள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணை கேரளா கோர்ட் ஸ்ரீசாந்த் மீதான பிசிசிஐ-பின் தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ-யின் தரப்பில், கேரள உயர் கோர்ட்டின் டிவிசன் பென்ஞ்-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாந்த் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்த விசாரணையின் முடிவில், பிசிசிஐ விதித்த ஆயுட்கால தடை தொடரும் என உத்தரவிட்டது. இதனால், அவர் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீசாந்த் டிவிட்டரில், கேரள கோர்ட்டில் முடிவு மோசமானது. எனக்கு மட்டும் தனி சட்டமா? உண்மையான குற்றவாளிகளை தண்டிப்பது யார்? சூதாட்டத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எந்த வகையில் தடை நீங்கியது? என்று நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கியில் பேசிய ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனமாகும். ஐசிசி என் மீது தடை விதிக்கவில்லை.

தற்போது ரஞ்சி கோப்பையில் கேரளா அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. கேரளா அணி ரஞ்சி டிராபி, இரானி கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன். ஆனால், இதுவெல்லாம் பிசிசிஐ கையில் உள்ளது’’ என்று கொந்தளித்து பேசி உள்ளார்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது பிசிசிஐ கருத்து தெரிவித்து உள்ளது, ஸ்ரீசாந்தால் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், தடை செய்யப்பட்ட ஒரு வீரர் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட ஐசிசியின் விதிமுறைகள் இடம் அளிக்கவில்லை. சட்ட நிலைகளை பிசிசிஐ நன்கு தெரிந்து கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Trending News