ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஜாம்பவான்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, இந்திய டி20 லீக்கிற்கு டாடா சொல்லிவிட்டு, மற்ற நாட்டு கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா, 2022 மெகா ஏலத்தில் அணிகளின் எண்ணிக்கை 8 முதல் 10 ஆக அதிகரித்த போதிலும் விற்கப்படாமல் போய்விட்டார்.
It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities
— Suresh Rain (@ImRaina) September 6, 2022
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரெய்னா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் (யுபிசிஏ) ஆகியோரிடம் பேசியுள்ளார். உண்மையில், ரெய்னா ஏற்கனவே தனது மாநிலத்திற்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்து, UPCA விடம் இருந்து NOC எடுத்துள்ளார். "இன்னும் 2-3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், உத்திரபிரதேச உள்நாட்டு அணியில் இப்போது நிறைய நல்ல வீரர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். நான் UPCA இலிருந்து NOC பெற்றுள்ளேன். எனது முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ராஜீவ் சுக்லாவிடம் கூட தெரிவித்துள்ளேன். எனது வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ மற்றும் யுபிசிஏவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும் படிக்க | இதை செய்தால் மட்டுமே இந்தியாவால் ஆசிய கோப்பை பைனலுக்கு தகுதி பெற முடியும்!
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக்குகளில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் சாலைப் பாதுகாப்பு உலகத் தொடரில் நான் இடம்பெறுவேன். தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உரிமையாளர்கள் இதுவரை என்னை அணுகியுள்ளனர். நிலைமை சீரானதும், நானே அனைவருக்கும் தெரிவிப்பேன், ”என்று ரெய்னா கூறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ரெய்னா மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச ஸ்கோராக உள்ளார். ரெய்னா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், பிசிசிஐ விதிகளின்படி, அவர் இன்னும் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட தகுதி பெறவில்லை.
நாட்டிற்கு வெளியே உள்ள தனியார் லீக்குகளில் விளையாட, அவர் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற பல ஐபிஎல் உரிமையாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க லீக்குகளில் அணிகளை வாங்கியுள்ளனர். நீண்ட காலமாக சிஎஸ்கே வீரராக இருந்து வரும் ரெய்னா, தென்னாப்பிரிக்க லீக்கில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும் படிக்க | இந்த வீரரை கவனிக்காத இந்திய அணி: ரோகித் இடம் கொடுக்காதது ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ