டிஎன்பிஎல் முதல் அரையிறுதி: திண்டுக்கல் - தூத்துக்குடி மோதல்

Last Updated : Sep 16, 2016, 03:03 PM IST
டிஎன்பிஎல் முதல் அரையிறுதி: திண்டுக்கல் - தூத்துக்குடி மோதல் title=

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அரையிறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி 

பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு நெல்லையில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

2-வது அரைஇறுதி போட்டி நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Trending News