வீடியோ: பாகிஸ்தானின் புதிய 'ஷேன் வார்னே' பந்தை சுழற்றும் சிறுவன்

பாக்கிஸ்தானில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறிய குழந்தையின் சுழலும் பந்து வீச்சை பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 26, 2018, 03:24 PM IST
வீடியோ: பாகிஸ்தானின் புதிய 'ஷேன் வார்னே' பந்தை சுழற்றும் சிறுவன் title=

கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் உலகம் என்றால் அது பாக்கிஸ்தான் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் உலகிற்கு திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்களை பாக்கிஸ்தான் கொடுத்துள்ளது. அது சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான், வசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். வேக பந்து வீச்சில் மட்டுமல்லாமல் சுழல் பந்து வீச்சிலும் அப்துல் காதிர் மற்றும் சக்லத் முஸ்தாக் போன்ற வீரர்களையும் பாக்கிஸ்தான் கொடுத்துள்ளது. 

திக் திக்!! ஒவ்வொரு பந்திலும் இன்ப அதிர்ச்சியை தந்த தினேஷ் கார்த்திக்

சில தினங்களுக்கு முன்பு, பாக்கிஸ்தான் வேக பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், சுழல் பந்து வீசும் ஒரு குழந்தையின் வீடியோவை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ பாக்கிஸ்தானில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரிம் அடைய செய்கிறது. 

இந்த வீடியோவில் பாக்கிஸ்தானை சேர்ந்த சிறிய பையன், சிமெண்ட் போட்ட மேற்பரப்பில் பந்தை வீசுகிறார். அவர் வீசும் பந்து அற்புதமாக ஸ்பின் ஆகிறது. அவர் பந்து வீசுவதை பார்த்தால், நமக்கு ஷேன் வார்னே மற்றும் மைக் ஜென்டிங் வீரர்களை நினைவூட்டுக்கிறது. 

Video: விடுமுறை நாளை கொண்டாடும் டோனி-யின் குடும்பம்!

6 வயதான இந்த சிறுவனின் பெயர் அலி மைக்கல் கான். இவன் பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவன். சமீபத்தில் இந்த சிறுவனின் திறமையை பார்த்த ஷேன் வார்னே, சிறுவனை சந்தித்ததாகவும், அவனது பந்துவீச்சுக்கு மிகவும் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 51 ஆயிரம் பேர் ட்விட்டரில் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் சுரேஷ் ரெய்னா-வின் புதிய பாடல் -வீடியோ!

இதேபோல சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் மற்றொரு பாக்கிஸ்தான் குழந்தையின் வீடியோ வைரலாகி இருந்தது. இந்த வீடியோவில் ஒரு குழந்தையின் பந்துவீச்சு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பாக்கிஸ்தான் வேக பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அந்த சிறுவனின் ரசிகராகவே மாறிவிட்டார்.

 

Trending News