ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை எளிதாக வீழ்த்தியது. இரண்டாவது நாளான இன்று மிகப்பெரிய போட்டி நடக்க இருக்கிறது. கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருக்கிறது.
கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இரு அணிக்கும் சந்திக்கப்போகும் முதல் போட்டி இது. கடைசியாக சந்தித்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதற்கு பழிதீர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலி, மீண்டும் ஃபார்ம்முக்கு திரும்பினால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பிரதமாதமாக இருக்கும்.
அதற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் விராட் கோலிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து அவர் நிச்சயமாக ஃபார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே உத்வேகத்தில் விராட் கோலியும் இருக்கிறார். கூடுதலாக பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டி அவருக்கு ஸ்பெஷலாகும். இந்திய அணிக்காக அவர் களமிறங்கப்போகும் 100வது சர்வதேச 20 ஓவர் போட்டி என்பதால், இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விராட் கோலி பேசும்போது, " எந்த நேரத்திலும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் விளையாடுவேன். அதற்காக ஒவ்வொரு பந்துக்கும் என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என விரும்புவேன். அதே உத்வேகம் களத்தில் எப்போதும் இருக்கும். நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன். என்னுடைய முழு ஆற்றலையும் அணியின் வெற்றிக்காக கொடுப்பது மட்டுமே என்னுடைய இலக்கு. அதனை இந்திய அணிக்காக விளையாடும் வரை தொடர்ந்து நிச்சயம் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அவுட்டா? நாட் அவுட்டா? முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை!
மேலும் படிக்க | INDvsPAK: பிளேயிங் 11-ல் விளையாட போவது இவர்கள் தான்! சூசகமாக அறிவித்த பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ