விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி: வங்கதேசம் பரிதாபம்

உலக கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலியின் அபார சதம், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2023, 10:29 PM IST
  • வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டி
  • 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • விராட் கோலி அதிரடியாக ஆடி சதமடித்தார்
விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி: வங்கதேசம் பரிதாபம் title=

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணி வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த விராட் கோலி ஒருநாள் போட்டியில் 48வது சதத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்திய அணிக்கான வின்னிங் ஷாட்டை அடித்தார். இதனையடுத்து ஆட்டநாயகனாகவும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணி இருக்கிறது. 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்... இந்தியாவுக்கு பெரிய சிக்கல் - பந்துவீசிய விராட் கோலி!

இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜூமுல் ஹொசைன் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். கடந்த இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் எடுத்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தியதைப் போல், இந்திய அணியையும் வீழ்த்திவிடலாம் என்ற கணக்குடன் பேட்டிங் எடுத்தார்.

அவரது திட்டப்படி பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாகவே வங்கதேச அணி ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களும், மகமதுல்லா 46 ரன்களும் விளாசினர். பும்ரா, சிராஜ், ஜடேஜா சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை இந்தப் போட்டியிலும் காண்பித்தது. சேஸிங்கில் இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் இந்திய அணி போட்டியிலும் அதையே செய்தது. ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுக்க, சுப்மான் கில் அரைசதம்  விளாசி 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களுக்கு பிறகு களம் வந்த விராட் கோலி வங்கதேசம் அணியின் பந்துகளை சிதறடித்தார். அவருக்கு பக்கபலமாக கே.எல்.ராகுல் களத்தில் இருந்தார். கடைசிகட்டத்தில் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்பதற்காக ராகுல் சிங்கிள் கூட எடுக்காமல் விராட் கோலியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். 

இதனை உணர்ந்து கொண்ட விராட் கோலி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி 48வது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்குப் பிறகு இதுகுறித்து பேசிய ராகுல், நான் தான் விராட் கோலியை சதமடிக்க வலியுறுத்தினேன் என கூறினார். நடப்பு உலக கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருக்கும் அணிகள் இந்தியா - நியூசிலாந்து மட்டுமே. இவ்விரு அணிகளும் வரும் ஞாயிற்றுக் கிழமை தர்மசாலாவில் சந்திக்கின்றன. அந்த போட்டியில் வெற்றிபெறும் அணி உலக கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். 

மேலும் படிக்க | Virat Kholi Bowling: பந்தே வீசாமல் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் விராட் கோலி தான்..! தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News