கோப்பையை பெற்றதும் ரோஹித் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ!

Ind vs Aus: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 08:13 AM IST
  • ஆஸ்திரேலியா அணிக்கு டி20 தொடரை வென்றது இந்தியா.
  • 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தல்.
  • ஒரே ஆண்டில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை.
கோப்பையை பெற்றதும் ரோஹித் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ! title=

இந்தியா vs ஆஸ்திரேலிய அணி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று கோப்பையை பெற்ற ரோஹித் சர்மா, நேராக அதனை தினேஷ் கார்த்திக்கிடம் கொடுத்தது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே சில கெமிஸ்ட்ரி இருந்தது, மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இருந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கு தனது முழு ஆதரவை வழங்கி வந்தார். நாக்பூரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில், கார்த்திக் 2 பந்தில் 10 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.  

 

மேலும் படிக்க | தொடரை வென்றது இந்தியா... சூர்யகுமார், விராட் கோலி வெறியாட்டம்

அந்த நேரத்தில் நான்-ஸ்ட்ரைக்கராக இருந்த ரோஹித் அவரை கட்டிப்பிடித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த இறுதி டி20 போட்டியில், கிளென் மேக்ஸ்வெல்லின் ரன்அவுட்டை அடுத்து ரோஹித் கார்த்திக்கின் ஹெல்மெட்டில் முத்தமிட்டார். இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அனைவரது மனதைக் கவரும் விதத்தில், கோப்பையை கார்த்திக்கிடம் ரோஹித் வழங்கினார். ரோஹித்தின் இந்த செயல் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.

 

இந்த வெற்றியின் மூலம், ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 வெற்றியானது 2022ல், டி20ல் இந்தியாவின் 21 வது வெற்றியாகும். முந்தைய உலக சாதனையாக 2021ல் 20 டி20 போட்டிகளை பாகிஸ்தான் வென்று இருந்தது. இந்தியா இந்த ஆண்டு சொந்த மண்ணில் 10 டி20ஐ வென்றுள்ளது.  அடுத்ததாக வரும் 28ம் தேதி தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

மேலும் படிக்க | ரிஷப் பந்தின் சகோதரியா இவர்... பிறந்தநாள் புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News