5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!

Last Updated : Aug 30, 2017, 05:10 PM IST
5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி! title=

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விண்டீஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

 

முன்னதாக கடந்த 25-ஆம் தேதி ஹெட்டிங்லேயில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 427 ரன்களும் எடுத்தன. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்க்சில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

Trending News