அறிமுக ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை தெறிக்கவிட்ட இளம் வீரர் அல்ஜாரி ஜோசப் யார்?

ஐ.பி.எல் தொடரில் ஒரே போட்டியில் மிக குறைந்த ரன்கள் விட்டுகொத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அல்ஜாரி ஜோசப்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2019, 09:16 AM IST
அறிமுக ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை தெறிக்கவிட்ட இளம் வீரர் அல்ஜாரி ஜோசப் யார்? title=

IPL 2019 தொடரின் 19-வது லீக் ஆட்டம் நேற்று ஹைத்ராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில் சன் ரைஸஸ் ஹைதிராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைத்ராபாத் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடே 20(24) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 17.4-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஹைதிராபாத் அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மும்பை வீரர் அல்ஜாரி ஜோசப் 6 விக்கெட் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். தனது முதல் ஆட்டத்திலேயே வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுகொத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை செய்துள்ளார் அல்ஜாரி ஜோசப். 

அவர் அவுட் செய்த வீரர்கள்..... டேவிட் வார்னர் (15), விஜய் சங்கர் (5), தீபக் ஹூடா (20), ரஷித் கான்(0), புவனேஷ்வர் குமார் (2), சித்தார்த் கவுல்(0) போன்றோர் ஆவார்கள். நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக அல்ஜாரி ஜோசப் தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.பி.எல் தொடரில் ஒரே போட்டியில் மிக குறைந்த ரன்கள் விட்டுகொத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அல்ஜாரி ஜோசப் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்க்கு முன்பு சோஹல் தன்வீரின் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி சாதனையை முறியடித்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடக்கூடியவர் தான் அல்ஜாரி ஜோசப். 22 வயதான இளம் வீரர் ஆவார். குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடி உள்ளார். 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 ரன்கள் எடுத்துள்ளார். 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். 

அதேபோல 15 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 104 ரன்களும், 24 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

Trending News