இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் வரை ஓயமாட்டேன் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
புற்றுநோய் காரணமாக 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பின்பு இந்திய அணியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்(35) இடம்பெறாமல் இருந்தார். சிகிச்சைக்காக அமேரிக்கா சென்ற யுவராஜ் சிங், புற்றுநோயிலிருந்து முழுவதும் குணமாகினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம் பிடித்தார். காயம் காரணாமாக அரை இறுதி போட்டியோடு வெளியேறினார். ஐபிஎல் போட்டியிலும் அவர் விளையாட வில்லை அதன் பிறகு யுவராஜ் சிங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:- நான் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிபேன். அது வரை ஓய மாட்டேன். ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனுக்கு தேவையான விசியம் ரன் சேர்ப்பது. கிரிக்கெட்டில் ரன் சேர்ப்பதற்காக அவன் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்வானோ அனைத்தையும் நான் மேற்கொண்டு வருகின்றேன். 5 போட்டிகள் கொண்ட உள்ளூர் தொடரில் பங்கேற்று 672 ரன்களை குவித்துள்ளேன். அதில் அதிகபடசமாக 260 ரன்கள் மற்றும் சராசரி 84 ஆகும்.
எனது கடமை சரியாக செய்துவருகின்றேன். என் பார்மை திரும்ப அடைந்துள்ளேன். எனது அதிரடி ஆட்டத்தை திரும்பப் பெற்றுள்ளேன். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என தெரிவித்துள்ளார்.