விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது.

Last Updated : Jun 27, 2016, 12:57 PM IST

Trending Photos

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது. title=

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

ஆண்களுக்கான பிரிவில் இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், 177-ம் நிலையில் இருக்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வார்டை சந்திக்கிறார். 

மற்றொரு சுற்றில் சுவிட்சர்லாந்து சேர்ந்த முன்னணி  வீரரான ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவை சேர்ந்த குயிடோ பெல்லாவை எதிர்த்து ஆடுகிறார். 

பெண்கள் பிரிவில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான முகுருசா, இத்தாலியின் கமிலா ஜியோர்கியை ஆகியோர் மோத உள்ளனர்.

Trending News