பெண்கள் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதின. கிரிஸ்டர்சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. ஷெபாலி வர்மா 53 ரன்களும், கேப்டன் மிதாலி 68 ரன்களும் எடுத்தனர்.
மேலும் படிக்க | பந்து ஸ்டம்பில்பட்டும் அவுட் இல்லை..தப்பித்த ராயுடு! கடுப்பான கேகேஆர்!
பின்வரிசையில் களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தார். இதனால், தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிக்கு இந்திய அணி சவாலான ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஓபனிங் இறங்கிய லாரா அதிரடியாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். லாரா குட்டால் 49 ரன்களும், சுனே 22 ரன்களும் எடுத்தனர்.
பின்வரிசையில் களமிறங்கிய மிக்னான் 52 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் ஆட்டம் பரபரப்பு ஏற்பட்டது. 2 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தபோது இந்திய வீராங்கனை நோபால் வீசினார். அப்போது, 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. மேலும், இந்த உலகக்கோப்பையில் கடைசி அணியாக அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் இந்த சேஸிங், பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச சேஸிங்காகவும் பதிவானது.
மேலும் படிக்க | IPL 2022: முதல் போட்டியில் வாகை சூடியது KKR! தடுமாறியது CSK
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR