5 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பீட்டர்மாரிட்ஸ்பர்க்-ல் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்!
#WATCH EAM Sushma Swaraj unveils a bust of Mahatma Gandhi at #Pietermaritzburg station in South Africa pic.twitter.com/XuPL6XnewL
— ANI (@ANI) June 7, 2018
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் ஜோஹனஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த உச்சி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், விவாதிக்கப்படவுள்ள விவரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் கடந்த திங்கள் அன்று நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா உடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பான கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 5 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீட்டர்மாரிட்ஸ்பர்க்-ல் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். முன்னதாக, மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார்.