தமிழ்நாடு SSLC பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு பார்வை!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது!

Last Updated : May 23, 2018, 09:11 AM IST
தமிழ்நாடு SSLC பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு பார்வை! title=

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது!

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு எனப்படும் SSLC பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். மேலும் தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்வு முடிவுகள்...

  • வெளியான தேர்வு முடிவுகளின் படி தேர்வு எழுதிய மாணவ/மாணவியர்களில் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இது 0.1% அதிகமாகும்.
  • இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.4% எனவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது, ஈரோடு இரண்டாமிடமும் விருதுநகர் மூன்றாமிடமும் பிடித்துள்ளது.
  • தேர்வு முடிவின் படி 5456 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது!

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்!

Trending News