Flight of Fantasy : விமானத்தில் பறந்த பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள்

மெட்ராஸ் அங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பு 'ஃபிளைட் ஆஃப் ஃபாண்டஸி - 2'  எனும் திட்டம் மூலம் 10 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை விமானத்தில் டெல்லி அழைத்து சென்றுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 11, 2022, 05:18 PM IST
  • மாணவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகம், தாஜ்மஹாலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
  • காட்சன் ருடால்ஃப் இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
Flight of Fantasy : விமானத்தில் பறந்த பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் title=

இந்தியா முழுவதும் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விமானத்தில் பறக்கும் ஆசையை ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஃபிளைட் ஆஃப் ஃபாண்டஸி எனும் திட்டம் மூலம் நிறைவேற்றி வருகின்றனர். 

அந்த வகையில் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பு 10 பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை விமானம் மூலம் டெல்லி அழைத்து சென்றனர். அங்கு நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். 

மேலும் படிக்க | 'கல்வி மூலம் விடுதலை' - விளிம்புநிலை மக்களுக்கான உதவித்திட்டம்!

பின்னர் மீண்டும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி இசையமைப்பாளரான காட்சன் ருடால்ஃப் கலந்து கொண்டார். 

மாற்றுத்திறன் மாணவர்களை விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லும் மெட்ராஸ் அங்கரேஜ் ரவுண்ட் டேபிளின் முயற்சியை பாராட்டிய காட்சன் ருடால்ஃப்,  நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்றும், நம் எண்ணங்கள் உயர்வானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற உதவியாக இருந்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் விஜய் ராகவேந்திரா, சந்தோஷ் ராஜ், அம்புஜ் கெஜ்ரிவால் ஆகியோருக்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஃபேஷன் ஷோ... சென்னையில் ஒரு மாற்று முன்னெடுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News