நூறு வயது தம்பதிக்கு திருமணம்! உறவினர்கள், ஊர்மக்கள் ஆசி பெற்றனர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 100 வயதை கடந்த தம்பதிக்கு நூற்றாண்டு விழா ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினரால் கொண்டாடப்பட்டது.  

Written by - RK Spark | Last Updated : Aug 30, 2022, 01:31 PM IST
  • 100 வயதை கடந்த தம்பதிகள்.
  • ஊர்மக்கள், உறவினர்கள் ஆசி பெற்றனர்.
  • அனைவருக்கும் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நூறு வயது தம்பதிக்கு திருமணம்! உறவினர்கள், ஊர்மக்கள் ஆசி பெற்றனர்! title=

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி கிராமத்தில் வசிக்கும் முனியப்பா(100), அவருடைய மனைவி குண்டம்மா(எ) மாரம்மா (96) ஆகியோர் நூறாண்டு கடந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் நூற்றாண்டு வைரவிழாவை குடும்பத்தார் கொண்டாடினார்கள். 

marriage

மேலும் படிக்க | சைக்கிள்களை குறி வைத்து திருடும் 60 வயது பலே திருடன்!

தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் நூறாண்டு கடந்து வைர விழா கொண்டாடும் தம்பதிக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து திருமணம் நடைபெற்றது. 

marriage

நூறு வயது கடந்த தம்பதியினருக்கு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளூ பேரன், எள்ளு பேரன் என நான்கு தலைமுறையினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்று வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க | கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News