10, 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 01:30 PM IST
10, 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அன்பில் மகேஷ் title=

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) கூறியதாவது.,

ALSO READ | பள்ளியில் கருகிய நிலையில் மாணவி மீட்பு! ஒற்றை வார்த்தையைச் சொல்லி உயிரிழந்த பரிதாபம்

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு (Public Exam 2022) என்பது கண்டிப்பாக நடைபெறும். அது தொடர்பாக முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு என்ன ஆலோசனை வருகிறதோ அதைப் பின்பற்றி செயல்படுவோம்.

When will the class 12 exams mark be released in Tamil Nadu | தமிழ்நாட்டில்  +2 மார்க் எப்பொழுது வெளியிடப்படும்? மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு | Tamil  Nadu News in Tamil

இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது நிச்சயம் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.இதுபோன்று இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு விசாரணை நடைபெறும். காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே தயவு கூர்ந்து, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளியில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

ALSO READ | இளங்கலை பட்டப்படிப்பு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News