புதுடெல்லி: பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவரின் அற்புதமான கண்டுபிடிப்பு உங்களை ஹேக்கர் வைரஸில் இருந்து பாதுகாக்கும்.
மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் ஹேக்கர்களால் வரும் லிங்க் வைரஸிலிருந்து பாதுகாக்க சைபர்வால் என்ற ஃபயர்வாலை தயாரித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மாணவர் ஒருவர் சைபர்வால் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த புதிய கண்டுபிடிப்பு, ஹேக்கர்களுக்கு சவாலாக உள்ளது.
மீரட்டைச் சேர்ந்த பிரசாந்த் வர்மா தற்போது பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
தரவு பாதுகாக்கப்படும்
இந்த சைபர்வாலின் பாதுகாப்பு வளையத்தினால், இனிமேல், மொபைல் (Mobile data protection) அல்லது தொடர்புடைய சாதனத்திலிருந்து தரவு திருட்டு இணைப்பு தொடர்புகள் வராது. புதிய சைபர்வால் மூலம் தரவு பாதுகாக்கப்படும்.
இந்த புதிய கண்டுபிடிப்பால், வங்கி கணக்குகளை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களையும் தடுக்க முடியும். இந்த சைபர்வாலுக்கு விரைவில் காப்புரிமை கிடைத்துவிடும். அதன் பிறகு பொதுபயன்பாட்டுக்கு வரும்.
Also Read | நோக்கியாவின் தவறுகளை ஆப்பிள் பின்தொடர்கிறதா?
இருவழி பாதுகாப்பை வழங்கும் ஃபயர்வால்
மொபைலில் ஆப் மூலமாகவும், கணினி மற்றும் லேப்டாப்பில் உள்ள சாப்ட்வேர் மூலமாகவும், பிளக் இன் சர்வரிலும் பயன்படுத்தக்கூடிய இந்த ஃபயர்வாலை பிரசாந்த் வர்மா உருவாக்கினார். இந்த ஃபயர்வால் மொபைல் மற்றும் பிற சாதனங்களில் இரண்டு வகையான பாதுகாப்பை வழங்குகிறது.
முதல் பாதுகாப்பு, நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்பும் போதெல்லாம், அது இரு தரப்பிலிருந்தும் அனுமதி கேட்கும். அனுமதி அளித்த பின்னரே பணம் மாற்றப்படும். இதன் மூலம் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
பூமரங் ஆகும் ஹேக்கரின் இணைப்பு
ஃபயர்வால் பணப் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும். பிரசாந்தின் கூற்றுப்படி, ஹேக்கர் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பை லிங்க் மெசேஜ் மூலம் ஹேக் செய்ய விரும்பினால், அதை சைபர்வால்தடுக்கும்.
19 வயது பிரசாந்த் வர்மா, ஏற்கனவே ஹேக்கர் சமூகத்தில் ஒரு நட்சத்திரமாக மாறிவிட்டார். டிஜிட்டல் தொழில்முனைவோராக இருக்கும் பிரசாந்த், ஹேக் தி ட்ராப் ஆஃப் ஹேக்கர் (Hack The Trap Of Hacker) புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
இணையப் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்களை ஹேக்கர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய இந்தப் புத்தகம், பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
ALSO READ | Rules Change: மாறும் விதிகள்! புத்தாண்டில் தபால் நிலைய வங்கியின் கட்டணங்கள் உயர்கிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR