ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண ஜூன் 25க்குள் வழங்குக: தமிழக அரசு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களை வரும் 25-ஆம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2021, 05:09 PM IST
  • கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
  • 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள்
  • முதல் தவணையானது மே மாதத்தில் கொடுக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண ஜூன் 25க்குள் வழங்குக: தமிழக அரசு title=

குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி ஆட்சி அமைத்த முதல்நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். 

அதன்படி ரேஷன் கடைகளில் (Ration Shops) முதல் தவணையானது மே மாதத்தில் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது தவணை ரூ.2000 உடன் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 14 அத்தியாவசியப் பொருட்களும் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

ALSO READ | பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை: தமிழக அரசு மேல்முறையீடு

ரேஷன் கடைகளில் (Ration Shops) அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம் இங்கே காண்க.,
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ 
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம் 
கடலை பருப்பு- 250 கிராம் 
டீ தூள் -200கிராம் 
கடுகு- 100 கிராம் 
சீரகம்- 100 கிராம் 
மஞ்சள் தூள்- 100 கிராம் 
மிளகாய் தூள்- 100 கிராம் 
குளியல் சோப்பு 25 கிராம் – 1 
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை இந்த 14 மளிகை பொருட்களில் அடங்கும்.

இந்நிலையில், தற்போது ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் வருகிற 25ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி (Corona Relief) ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களை கொடுத்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்​

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News