நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 8, 2020, 04:12 PM IST
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்! title=

நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும்  அவரி 168-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் ரஜினி, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள்  இருந்த இடத்துக்கு நேராக வந்தார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார். 

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம், நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News