செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னர் வருகைக்காக பந்தோபஸ்து பணியில் இருந்த டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் காலை சிற்றுண்டி உண்பதற்காக கிளாம்பாக்கம் அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் கவர்னர் வருகை இருக்கிறது உங்களது காரை ஓரமாக நிறுத்துங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து காரை அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளாகத்திற்கு அருகில் நிறுத்தியுள்ளனர். அப்போது கவர்னர் கான்வாய் சென்றவுடன் தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி வந்த டிராபிக் போலீஸ் ராஜிவ் காந்தி அங்கு இருந்த நான்கு இளைஞர்களை தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்த இளைஞர்களின் செல்போனை பறித்து ட்ராபிக் போலீஸ் ரகலையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க | Tamil Nadu 10th Result: வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
உடனடியாக அந்த பகுதியில் பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ ரமேஷ் என்பவரும் மற்றும் சக போலீசார் அனைவரும் இளைஞர்களை சூழ்ந்து அவர்களும் இளைஞர்களிடம் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பட்டப் பகலில் போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இணையத்தில் போலீசார் ரகளையில் ஈடுபட்டு வரும் வீடியோ தீயாய் பரவி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து கடந்த மாதம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், "காவல்துறையினர் தவறுகளை திருத்திக்கொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். காவல்துறை செயல்பாட்டில் குறையே கிடையாது என்று சொல்லமாட்டேன். அதேபோல அவர்கள் குற்றங்களை கண்டும் காணாமல் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை காப்பாற்ற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்" என்று கூறினார்.
இது போக நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பல்வீர்சிங் மீது எற்கனவே 3 வழக்குகள் உள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் பேரில் பல்வீர்சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ