‘ஆட்டிசம்’ நோயல்ல ; குறைபாடு மட்டுமே.!

இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 2, 2022, 02:19 PM IST
  • ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை இயல்பாக பார்க்க வேண்டும்
  • கர்ப்ப காலத்தில் அதிக மன அழுத்தம் இருந்தால் ஆட்டிசம் பாதிப்பா ?
  • ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகால குழந்தைகள்
‘ஆட்டிசம்’ நோயல்ல ; குறைபாடு மட்டுமே.! title=

 

மருத்துவ உலகில் சவாலாக உள்ள நோய்க் குறைபாடுகளில் ஒன்று ஆட்டிசம். இந்தக் குறைபாடு குறித்து தொடர்ந்து மருத்துவர்கள் பல வடிவங்களில் உரையாடி வருகின்றனர். எந்த உரையாடல் ஆனாலும் மனம் ஒன்றுதான் இதற்குத் தீர்வு என்ற ஒற்றைப்புள்ளியில் வந்துதான் மருத்துவர்கள் நிற்கிறார்கள். இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டால் இயல்பான ஒரு சூழலை உருவாக்கிட முடியும் என்று விளக்குகிறார் மருத்துவர் தீபா மோகன்ராஜ். சேவை மனப்பான்மையோடு கோவையில் ஆட்டிசக் குழந்கைளுக்கு சிறப்புப் பள்ளி நடத்துபவர் தீபா மோகன்ராஜ். கௌமாரம் பிரசாந்தி  அகாடமியின் தலைவராகவும் இருந்து வருபவர். ஆட்டிசம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் தீபா மோகன்ராஜ்.  

Image Of Doctor

மேலும் படிக்க | உலக Autism விழிப்புணர்வு நாள்! அறிகுறிகள் என்னென்ன!

‘குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ‘ஆட்டிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் ‘மதி இறுக்கம்’ என்கிறார்கள். நிச்சயமாக இது ஒரு நோய்க் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரணக் குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். நிச்சயம் இயல்பான குழந்தைகளைப் போல அவர்களுக்கும் கற்றுக்கொள்வார்கள்.  

ஆஸ்திரியாவில் பிறந்த லியோ கன்னர் என்பவர்தான், முதன் முதலாக இந்த உலகத்திற்கு, ஆட்டிசம் என்பதை தெளிவுப்படுத்தினார். இவர் 1943-ம் ஆண்டு ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளைப் பற்றி முதல்முதலில் பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து பெர்னார்ட் ரிம்லாண்ட், ரூத் சல்லிவன் ஆகிய இரண்டு மருத்துவர்கள், 1965-ம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு பற்றி ஒரு முக்கியமான ஆய்வைத் தொடங்கினர். 

மேலும் படிக்க | விமானத்தில் கதறி அழும் குழந்தையை தூங்க வைக்கும் பணிப்பெண்! வைரல் வீடியோ!

வெறும் ஆய்வு மட்டுமல்லாமல், ஆட்டிசம் மாணவர்களுக்காக ‘ஆட்டிசம் சொசைட்டி’ என்ற அமைப்பையும் தொடங்கினர். அதில் இருந்துதான் உலகம் முழுக்க இந்தப் பிரச்சனைப் பற்றி மருத்துவர்கள் விவாதிக்க ஆரம்பித்தனர். உலகம் முழுக்க இந்த பிரச்சனை இருப்பதை உணர்ந்த ஐ.நா, 2008-ம் ஆண்டில் ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது, உலகம் முழுக்க ஏப்ரல் 2-ந் தேதி ‘உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்’ என்று ஐ.நா அறிவித்தது. 

பொதுவாக, கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிசக் குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது. அதே போல், தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், ஃபோலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்கள் உள்ளிட்ட சிக்கல்கள் நிறைந்த பெண்களுக்கு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகாலக் குழந்தைகள் என்று சொல்லலாம். அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, இந்த சமூகத்திற்கு இருக்கிறது. அதைக் கருத்தில்கொண்டுதான், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ந் தேதியை, ‘உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின’மாக கடைப்பிடித்து வருகிறோம். குறைபாடுகளை நோயாகப் பார்க்க வேண்டாம். ஆரம்ப நிலை சிகிச்சையிலேயே  எளிதில் குணமாகி விடும்  நோய்தான் ஆட்டிசம். முதலில் இதுதொடர்பான பயத்தை விடுங்கள். பயத்தை விட்டுக் குழந்தைகள் நலனை மட்டுமே  மனதில் வைத்தால் எப்போதும் எதிலும் நன்மைதான்!’ என மருத்துவர் தீபா மோகன்ராஜ் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Bizarre 'Out of nowhere': கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News