மெரினா கடலில் குளித்தால் பெற்றோர் மீது நடவடிக்கை!!

சென்னை மெரினா கடலில் தடையை மீறி குழந்தைகள் குளித்தால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இணை கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Last Updated : Feb 3, 2019, 12:36 PM IST
மெரினா கடலில் குளித்தால் பெற்றோர் மீது நடவடிக்கை!! title=

சென்னை மெரினா கடலில் தடையை மீறி குழந்தைகள் குளித்தால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் இணை கமிஷனர் எச்சரித்துள்ளார்.

சென்னை, தாம்பரம், சேலையூர் நகராட்சி பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த, ௧௪ வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம், மெரினா கடலில் குளித்துள்ளனர். அப்போது, கடல் அலையில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணியில், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

தற்போது மெரினா கடற்கரையில், 'கடலில் குளிக்காதீர்' என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர், பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மெரினா கடலில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், தனியே வந்து குளித்தால், அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரித்துள்ளார்.

Trending News