வட மாநிலங்களில் பிரபலமாகும் ‘போஸ்டர் அரசியல்’ கலாச்சாரம்...

  மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த கொரோனா நெருக்கடிக்கு  மத்தியில் போபால்  மக்களவை எம்.பி., பிரக்யா தாகூரை  "காணவில்லை" என்று  அறிவிக்கும்  சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Last Updated : May 30, 2020, 05:43 PM IST
வட மாநிலங்களில் பிரபலமாகும் ‘போஸ்டர் அரசியல்’ கலாச்சாரம்... title=

போபால்:  மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த கொரோனா நெருக்கடிக்கு  மத்தியில் போபால்  மக்களவை எம்.பி., பிரக்யா தாகூரை  "காணவில்லை" என்று  அறிவிக்கும்  சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"போபால் மக்கள் கொரோனா சிரமங்களுக்கு இடையே அவர்களின் எம்.பி. காணவில்லை" என்றும்  காணாமல் போனவர்களைத் தேடுங்கள்  என்ற  சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமலேஷ்வர் படேல், வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் சிந்திக்க வேண்டும் என்று  கூறி உள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது தோல்விக்குப் பின்னரும் கூட  இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை செய்கிறார், நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணில் படுவதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

கடினமான காலங்களில் மக்களுடன் மக்களாக  துணை  நிற்க முடியாத மக்கள்  பிரதிநிதிகளை எதிர்காலத்தில் தேர்வு செய்ய வேண்டாம் எனவும் காமலேஷ்வர்  படேல் குறிப்பிட்டுள்ளார்.

"பிரக்யா தாகூரை  களத்திற்கு வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர் சார்ந்த அரசுதான் இங்கு நடக்கிறது. இதில் அச்சப்பட தேவையில்லை" என்றும் அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

எனினும் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, பிரக்யா தாகூர் தற்போது AIIMS-ல் தனது கண் சிகிச்சைக்காகவும், புற்றுநோய்க்காகவும்  சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மளிகை பொருள் மற்றும் உணவு விநியோகம் போன்ற பல பணிகள் நடந்து வருகின்றன என்றும், "திக்விஜய் சிங்கின் செயல்கள் எல்லாம் வெறும் அரசியல் நடவடிக்கைகள்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக, முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் ஆகியோர் காணவில்லை என்ற சுவரொட்டிகள் சிண்ட்வாரா தொகுதியில் காணப்பட்டன. சுவரொட்டிகளில்  உள்ள  தலைவர்களைக் கண்டுபிடிக்கும் எவருக்கும் ரூ.21,000 பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டியிருந்தது.

இவ்வாறான சுவரோட்டிகளை ஒட்டுவது தற்போது அரசியலில்  ஒரு புது டிரண்டாக மாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மொழியாக்கம் – தெய்வ பிந்தியா

Trending News