புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் களம் பிஜேபி வெர்சஸ் திமுக அல்ல என்று கூறினார். ஏனென்றால், பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்லை என அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனால், பண பலத்தை வைத்துக் கொண்டு வளர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர் என கூறிய அவர், ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அது தெரியும் என தெரிவித்தார். மேலும், திமுகவை எந்த கூட்டணியும் தொட முடியாது, தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்
தொடர்ந்து பேசிய அவர், " எடப்பாடி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது நல்ல திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ உளறி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்களுடைய சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து பேசி, முதலமைச்சரிடம் கலந்து பேசி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும்.
ஆனால் அது என்ன என்பது குறித்து இப்போது சொல்வது தவறு. அது சஸ்பென்ஸ். மேகதாது அணையை தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் வழங்காது. இது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் குழுவுடன் பேசி வருகிறார் என தெரிவித்தார். ஏற்கனவே மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளனர். அவர்களின் இந்த முடிவு தமிழ்நாடு பாஜக தொண்டர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் பாஜகவின் முகமாக அறியப்படும் இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விலகியது, தமிழ்நாட்டில் பாஜகவின் நிலையை அப்பட்டமாக தெரிவிப்பதாக திமுக, அதிமுக விமர்சித்து வருகின்றனர். இந்த அடிப்படையில் பாஜக வளர்ந்துவிட்டதைப் போல மாயத்தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி, விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியல்! தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ