பெண்வேடமிட்டு மிளகாய் பொடியை தூவி தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது!

தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 16, 2021, 06:04 PM IST
பெண்வேடமிட்டு மிளகாய் பொடியை தூவி தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது!

Crime News: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அடுத்து கொல்லாபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி இவரது மனைவி தனபுஷ்பம் வயது 78 நேற்று இவர் வீட்டில் பின்புறம் முருங்கை மரத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தனபுஷ்பத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை கீழே தள்ளியுள்ளார். பின்னர் அவர் கழுத்தில் இருந்த 15 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். 

இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதுகுறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் நன்னிலம் டிஸ்பி இளங்கோவன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செந்தில் குமரன் மற்றும் காவலர்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை தொடர் விசாரணை நடத்தினர்.

Chain Robbery

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரியர்காரராக கீரனூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புர்கா அணிந்து கொண்டு அந்த மூதாட்டி வீட்டிற்குச் சென்று மிளகாய் பொடி தூவி கீழே தள்ளிவிட்டு 18 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் நகையை திருடியதும் அவர் சென்னைக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

உடனே தனிப்படை போலீசார் அவர் இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

crime news

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News