பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகினர். இந்த நிலையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் நேற்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றார். அவர் பேட்டி அளித்த சிறுது நேரத்தில், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அந்த வகையில் நேற்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும்,
சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
என்னினும், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் தமிழக எதிர்க் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.
Chennai: DMK Working President MK Stalin at Tamil Nadu opposition parties protest demanding roll back of bus fare hike pic.twitter.com/u2LCaIvAwW
— ANI (@ANI) January 29, 2018