குன்னூர் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்த கார் - கேரள மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் மலைப்பாதை பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2022, 12:10 PM IST
  • குன்னூரில் சாலை விபத்து
  • கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
  • காவல்துறை வழக்குப்பதிவு
குன்னூர் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்த கார் - கேரள மாற்றுத்திறனாளி உயிரிழப்பு title=

கேரள மாநிலம், பெருங்களத்தூர் தண்ணிகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் குட்டி (65). இவருடன் உறவினர்களான ஜார்ஜ் (60), தாமஸ் (68), இவருடைய பேத்தி அம்பு (9),  ஜோம்பிஸ் (35) ஆகியோர் காரில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறுக்கு 2 கி.மீ முன்பு சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. 

மேலும் படிக்க | களிமேடு விபத்து எதிரொலி: களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா

மேலும், 40 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாற்றுத் திறனாளியான ஜோஸ்க்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்கள் பள்ளத்தில் இருந்து அலறினர். இதனையறிந்த அந்த வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக, ராட்சத பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன்  பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை ரோப் மூலம் மீட்டனர். காரில் படுகாயங்களுடன் இருந்த தாமஸ், ஜோபிஸ், அம்பு ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | போதையில் ரகளை செய்த இளைஞரை தட்டிக்கேட்ட மூதாட்டி வெட்டிக்கொலை

ஆனால் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News