தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு...

தமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : May 6, 2020, 09:03 PM IST

Trending Photos

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு... title=

தமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., தமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 4,829-ஆக அதிகரித்துள்ளது. 68 வயது ஆண் ஒருவர் மற்றும் 59 வயது பெண் என இருவர் இன்று உயிரிழந்ததையடுத்து கொரோனா பாதிப்பு மொத்த பலி 35-ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை தகவல்கள் படி தமிழகத்தில் 3,320 ஆண்களுக்கும், 1,507 பெண்களுக்கும் கொரோனா தொற்றுக்கு உறுதியாகி இருப்பதாகவும், 2 திருநங்கைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

தகவல்கள் படி கோயம்பேடு சந்தை தொடர்பால் இன்றும் அதிக நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து இன்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை அடுத்து, இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மட்டும் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று மட்டும், 13,413 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகமாக இருப்பதால், பாதிப்பு அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகப்பட்சமாக 2328 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் இன்று மட்டும் 324 வழக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்து கடலூரில் 324 பேருக்கும், அரியலூரில் 222 வழக்குகளும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 6-ஆம் நாளாக சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர்., செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது.

Trending News