காவிரி நீர் விவகாரத்தின் 10 முக்கிய அம்சங்கள்!!

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். 

Last Updated : Feb 16, 2018, 06:24 PM IST
காவிரி நீர் விவகாரத்தின் 10 முக்கிய அம்சங்கள்!! title=

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். 

1. காவிரி நதி பொதுவானது. எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. 

2. காவிரி நீரை இரு மாநிலங்களும் தகுந்த முறையில் பிரித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும்.

3. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 14.75 டிஎம்சியை குறைத்து 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்.

4. கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி எம் சி தண்ணீரோடு சேர்த்து கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர்  

5. கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மாற்றமில்லை.

8. காவிரி நீர் தொடர்பாக 1892-ல் மற்றும் 1924-ல் மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும்.

6. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

7. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்ய முடியாது.

8. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

9. மத்திய அரசு 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி தீர்ப்பாயம் அமைத்தது.

10. காவிரி பிரச்சனை காரணமாக தமிழகத்தின் பாசனப்பகுதி 25 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக குறைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Trending News