Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

Happy Pongal 2023 Flower Rates: கொரோனா தாக்கத்திற்கு பிறகு வரும் பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடிவரும் நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 14, 2023, 09:33 AM IST
  • உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலைகள்
  • பொங்கலை முன்னிட்டு அதிகரித்த விலைவாசி
  • பூக்களின் விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்
Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை title=

மதுரை: கொரோனா தாக்கத்தால், இரண்டு பொங்கல்கள் களை இழ்ந்த நிலையில், 2023ம் ஆண்டில் வரும் இந்த தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பண்டிகை என்றாலே பூக்களின் தேவை அதிகரித்துவிடும். அதிலும், தைத் திருநாளான பொங்கல் மற்றும் அதன் முன்னரும் பின்னரும் வரும் மங்கலமான நாட்களில், பூஜைக்காகவும், அலங்காரத்திற்காகவும் பூக்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதிலும் மார்கழி மாதம் முழுவதும் பூக்களுக்கு இருக்கும் தேவை, தையில் இரட்டிப்பாகிறது.

இந்த நிலையில், பூக்களின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலையைக் கேட்டால், அதிர்ச்சியளிப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ வரத்தில் இல்லாத காரணத்தினால் பிச்சி பூ கிலோ 3000 வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்று மகர சங்கராந்தி, நாளை பொங்கல் பண்டிகை, தொடர்ந்து காணும் பண்டிகை என தொடர் பண்டிகை காலத்தை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் உற்சாகமாக களை கட்டியிருக்கும் கொண்டாட்டங்கள், பூக்கள் விலையை அதிகரித்து, திண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள பூ சந்தைகளில் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள் 

நெல்லை பூ மார்க்கெட்டில் பூ வரத்து அதிகமாக இருந்தாலும், அங்கும் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, சென்னை, சிவகங்கை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட அனைத்து  ஊர்களிலும் மலர் வரத்தை விட தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்ந்து காணப்படுகிறது.

வழக்கமாக, சாதாரண நாட்களில் செவ்வரளி சாமந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை இருக்கும். ஆனால், பொங்கல் பண்டிகை காலத்தை முன்னிட்டு, செவ்வரளி சாமந்தி  பூக்களின் விலை 1250 வரை விற்கப்படுகிறது. இதே போல் பிச்சிப்பூ கிலோவிற்கு 3000 முதல் 3500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை பூ வரத்து இல்லை என்பதால், அதற்கு வியாபாரிகள் சொன்னதே விலை என்று இருக்கிறது. பூக்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கும்ப ராசியில் இணையும் எதிரி கிரகங்கள் சூரியன்-சனி இணைப்பால் மகிழும் ராசிகள்

மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News