நீட் எட்டாக்கனி அல்ல: சாதித்துக் காட்டிய தமிழக அரசு பள்ளி மாணவி

நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 11:08 AM IST
  • 2 மாதத்தில் படித்து நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சென்னை அரசு பள்ளி மாணவி.
  • நீட் தேர்வில் குறைத்த மதிப்பெண் சேலம் மாணவர் தற்கொலை.
  • தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்ப்பாகாது.
நீட் எட்டாக்கனி அல்ல: சாதித்துக் காட்டிய தமிழக அரசு பள்ளி மாணவி title=

நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அது குறித்த தகவல்கள் பின்வருமாறு.

போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் ரசிகா, வயது 17. இவரது தந்தையான 51 வயதான சேகர் என்பவர் லேத் வேலை செய்து வருகிறார். இவரது தாய் 46 வயதான சுமதி. சேகர், சுமதியின் மூத்த மகள் கௌசல்யா(20). இளைய மகள் ரசிகா சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் பயின்று வந்தார். 

இவர் முதல் முறையாக நீட் தேர்வு (NEET Exam) எழுதினார். அதில் 439 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து மாணவி கூறுகையில் தேர்ச்சிக்கு 2 மாதத்திற்கு முன்பு தான் தயாரானதாகவும் தனது தந்தை லேத் பட்டறை வேலை செய்வதாகவும் நம்முடைய பாடத் திட்டங்களை முறையாக படித்தாலே தேர்வில் வெற்றி பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

வெற்றி பெறுவதற்கு பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மிகுந்த உறுதுணையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் தொடர்ந்து படித்து தற்போது மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கவனமாக தொடர்ந்து படித்தால் அனைவரும் தேர்ச்சி பெறலாம் என்றும் இந்த மாணவி நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். 

ALSO READ: போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்தவர் பரிதாப மரணம்..!!

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், தனது முதல் மகளை நீட் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும் என தான் நினைத்ததாகவும்,  ஆனால் அது முடியாததால் இரண்டாவது மகளை நீட் தேர்வில் வெற்றி பெற செய்து உள்ளதாகவும் தொடர்ந்து தனது மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க முனைப்பு காட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சோக நிகழ்வாக சேலத்தில் ஒரு சம்பவம்

ஒரு புறம், தன்னம்பிக்கையின் தோற்றமாக, ஒரு மாணவி இருக்கையில், மற்றொருபுறம், சேலத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், விசம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சேலம் (Salem) மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஷ், நவம்பர் 1 ஆம் தேதி, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து,  பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

அவருக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

நீட் தேர்வு மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமும் நம் வாழ்க்கையில்ம் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவு முக்கியமானவை அல்ல. ஒரு வாசல் மூடினால், ஓராயிரம் வாசல்கள் திறக்கும் என்பதை அனைவரும், குறிப்பாக மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீட் என்பது ஒரு தேர்வே தவிர, வாழ்க்கை அல்ல. மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற இன்னும் பல தேர்வுகளும், வழிகளும் உள்ளன. இதை மாணவர்கள் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம். 

வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக காணும் மனப்பக்குவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்கொலை (Suicide) எந்த பிரச்சனைக்கும் தீர்ப்பாகாது!!

ALSO READ: தொண்டர்களே, உங்கள் இடத்திற்கே வந்து நேரில் சந்திக்கிறேன்: சசிகலா அறிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News