அதிர்ச்சி ரிப்போர்ட்! இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களா?

நாடு முழுவதும் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டில் தான் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 01:38 PM IST
  • கடந்த 2020-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் ஆகியோரை பற்றின புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு இருந்தது.
  • இந்தியாவில் 2019-ம் ஆண்டில் குத்தகை விவசாயிகள் 828 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2020-ம் ஆண்டில் 639 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
அதிர்ச்சி ரிப்போர்ட்! இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களா? title=

நாடு முழுவதும் கணக்கிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 2019-ம் ஆண்டை காட்டிலும் 2020-ம் ஆண்டில் தான் அதிகளவில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது 18 சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.  கடந்த 2020-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் ஆகியோரை பற்றின புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டு இருந்தது. அந்த புள்ளி விவரங்களின் படி, நாடு முழுவதும் 5,098 விவசாயக் கூலிகள் 2020-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

ALSO READ அரசுக்கு முன் கையை கட்டிக்கொண்டு இருப்பேன் என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் பாஜக எம்பி

மேலும் 2019-ம் ஆண்டில் 4,324 விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறையாமல் ஒரே ஆண்டில் 18 விழுக்காடு இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது மிகவும் வேதனையான ஒன்றாகும்.   அதிலும் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 4,940 பேர் கடந்த 2020-ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர்.இருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 விழுக்காடு இறப்பு விகிதமானது குறைந்து இருக்கிறது.

farmers

மேலும் இந்தியாவில் 2019-ம் ஆண்டில் குத்தகை விவசாயிகள் 828 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2020-ம் ஆண்டில் 639 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  மாநிலங்களின் அடிப்படையில் இறப்பு விகிதத்தினை கணக்கிடும்பொழுது மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் விவசாய கூலிகள் தற்கொலை செய்து கொண்டது கடந்த ஆண்டில் அதிகளவில் உள்ளது.  அதே சமயம் தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 6 பேர் 2019-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆணையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ SBI Kisan Credit Card: கடன் அட்டையில் 3 லட்ச ரூபாய் கடன் வசதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News