தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் துவங்கும்....

வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி்களில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2018, 04:29 PM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் துவங்கும்.... title=

வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி்களில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடற்கரை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் துவங்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...! 

வடகிழக்கு திசையிலிருந்து  மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி  கடலோரப் பகுதி்களில் வீசக்கூடும். வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் பலமான காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வீசக்கூடும்.

அக்டோபர் 25-ல் தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. 27,27,28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அக்டோபர் 29-ல் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் மழை பெய்யக்கூடும். அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் எனக்கூறி உள்ளது.

 

Trending News