மிக்ஜாம் மிரட்டலில் வெள்ளக்காடாகும் சென்னை - 2015 ரிப்பீட்டு..! எப்போது மீளும்?

மிக்ஜாம் புயல் மிரட்டலில் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தாழ்வாக இருக்கும் பகுதிகளில் இடுப்பளவு நீர் தேங்கியிருக்கிறது. இந்த வெள்ள பாதிப்புகள் எப்போது குறையும் என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2023, 03:39 PM IST
  • மிக்ஜாம் புயல் கடுமையான பாதிப்பு
  • சென்னையில் மீண்டும்பெரும் வெள்ளம்
  • இந்த பாதிப்பில் இருந்து எப்போது மீளும்?
மிக்ஜாம் மிரட்டலில் வெள்ளக்காடாகும் சென்னை - 2015 ரிப்பீட்டு..! எப்போது மீளும்? title=

மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, தாம்பரம் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியிருக்கிறது. கால்வாய்களில் எல்லாம் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் குறைந்தபட்சம் கணுக்கால் அளவான தண்ணீர் தேங்கியிருக்கிறது. புயல் நெருங்க நெருங்க மழையின் அளவும் அதிகரிப்பதால் தேங்கும் தண்ணீரின் அளவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக ஏரிகளில் நிரம்பிய உபரி நீரும் திறக்கப்பட்டு வருவதால் சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

சுரங்கப்பாதைகள் எல்லாம் குளங்களாக காட்சியளிக்கின்றன. தண்ணீர் தேங்கியிருக்கும் சுரங்கப்பாதைகள் எல்லாம் பொதுமக்கள் நலன்கருதி மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடி வைத்துள்ளது. இப்போது மிக்ஜாம் புயல் சுமார் 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மற்ற புயல்களுடன் ஒப்பிடும்போது இந்த புயலின் நகர்வு மிகவும் மெதுவாக இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு நிபுணரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பெரும்பாலான இடங்களில் இப்போது தண்ணீர் தேங்கியிருப்பதை பார்க்கும்போது பலருக்கும் 2015 பெரும்வெள்ளம் நினைவுக்கு வருவதாக நினைவு கூர்கின்றனர். மழையின் அளவு இதேபோல் கனமழையாக தொடரும்பட்சத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெதர்மேன் பிரதீப்ஜான் பேசும்போது, சென்னையில் வெள்ளம் ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே கூற முடியாது. இருப்பினும் மற்ற புயல்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் மிக அதிக கனமழை பெய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அந்த வகையில் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் இந்த மழை எப்போது குறையும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் இன்று நள்ளிரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து படிப்படியாக கனமழை குறையும் என தெரிவித்திருக்கிறார். அந்தவகையில் பார்க்கும்போது வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருக்கும் நீரின் அளவு செவ்வாய் கிழமை பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கலாம். முன்னுரிமையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரணப் பணிகளை செய்ய முடுக்கிவிடப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் மாநகராட்சி சார்பிலும், தமிழ அரசின் சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.   

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News