போக்குவரத்து விதிமீறல் ரூ.1.95 கோடி அபராதம் வசூல் - நீங்களும் ஒருவரா ?

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் 1.95 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 15, 2022, 09:00 PM IST
  • போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்
  • வசூலிக்கப்பட்ட அபராதத்தின் முழு விவரம்
  • போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட தகவல்
போக்குவரத்து விதிமீறல் ரூ.1.95 கோடி அபராதம் வசூல் - நீங்களும் ஒருவரா ? title=

போக்குவரத்து விதிமீறல் வழக்கு குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மார்ச் 2018 முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது.அதன்பின்னர் அபராதம் செலுத்துவது எளிமையாக காணப்பட்டது. போக்குவரத்து விதியை மீறுவோர் ஆன்லைன் வாயிலாக அபராதம் கட்ட வழி செய்யப்பட்டது. ஆரம்ப காலக்கட்டங்களில் இது சரியாக இருந்தாலும் காலப்போக்கில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தேக்க நிலையை நேர் செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று 10 அழைப்பு மையங்களை திறந்து வைத்தார். அவற்றின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.

Traffic violation,Traffic Police,Chennai traffic,Bike,Penalty

அதன்படி கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் கடந்த 11 ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் 10 அழைப்பு மையங்களில் 8088 தொலைபேசி அழைப்புகளைச் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவித்ததுடன், அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில் வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த 30 நாட்களில் 72,205 வழக்குகளில் அபராதம் செலுத்தப்பட்டு மொத்தம் ரூ. 1,95,31,815 அரசு கணக்கில் பெறப்பட்டுள்ளது. இதில் மார்ச் 2019 முதல் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் அபராதம் பெறப்பட்டது. மேலும் 53க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் ஒரே வாகனத்திற்கு அபராதம் செலுத்தப்பட்ட அதிகபட்ச வழக்குகளின் எண்ணிக்கை 271 ஆகும்.

Traffic violation,Traffic Police,Chennai traffic,Bike,Penalty

இதில் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டிய 801 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ. 80,74,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் ரூ.10,000 அபராதம் செலுத்தினர். அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த மொத்த எஸ்எம்எஸ் அமைப்பு கட்டண வசதி மையம் மற்றும் கட்டண தளங்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம் - ஒடிசாவில் சிக்கிய புரோக்கர்கள்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வழங்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து சாலைப் பயனாளர்களும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News