மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியேற்றிருக்கும் பாஜகவின் திரு. எல்.முருகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2021, 04:52 PM IST
  • 44 வயதான எல்.முருகன் மூன்று துறைகளுக்கு மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்
  • பாஜக தலைவராக தமிழக தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதற்கு பரிசு
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு வாழ்த்து
மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து title=

சென்னை: ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியேற்றிருக்கும் பாஜகவின் திரு. எல்.முருகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிக இளம் வயதினரை கொண்டுள்ளதாக புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. 44 வயதான தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தற்போது மத்திய அமைச்சரவையில் மூன்று இலாக்காக்களுக்கு இணை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற தமிழகத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்த முருகனின் முயற்சிகளுக்கு பரிசாக மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
36 புதிய அமைச்சர்களில் 35 வயது நிஷித் பிரமானி, 38 வயது ஷாந்தனு தாகூர், 40 வயது அனுபிரியா படேல், 42 வயது பாரதி பிரவீன் பவார் மற்றும் 45 வயதான ஜான் பிர்லாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு அதிகமான ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறவில்லை. 70 வயதாகும் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக மிக அதிக வயதுள்ள அமைச்சராக 69 வயது நாராயண் ரானே அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

65 வயதுக்கு மேற்பட்ட 5 பேர் மட்டுமே தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கின்றனர். நேற்று மாலை புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைவர் எல். முருகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒன்றிய மீன்வளம், கால்நடை & பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Also Read | மத்திய அமைச்சர் பதவியும் - அந்த 4 இடங்களும்; எல். முருகன் கடந்து வந்த பாதை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News