புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போடு, துப்பாக்கி குண்டு சிறுவனின் தலைப்பகுதியில் பாய்ந்தது. மயக்கமடைந்த சிறுவனை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறிவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு சிறுவன் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாத சூழ்நிலையில் தலையில் பாய்ந்த குண்டை எடுப்பதற்கு டாக்டர் குழு அமைத்துதான் சிகிச்சை அளிக்க முடியும் என்ற முடிவின்படி சிறுவனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை நார்த்தாமலையில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்பு நடந்தது:
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவலர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவது வழக்கம்.
அதேபோல கடந்த மாதம் டிசம்பர் 30 ஆம் தேதியும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காலை துப்பாக்கி சுடும் (Shooting Accident) பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதில் சில குண்டுகள் திசை மாறி, உணவு அருந்திக் கொண்டிருந்த 11வயது சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதனையடுத்து சிறுவன் புகழேந்தி மயக்கம் அடைந்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதலில் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறிவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தும் சிறுவன் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாத சூழ்நிலையில் தலையில் பாய்ந்த குண்டை எடுப்பதற்கு டாக்டர் குழு அமைத்துதான் சிகிச்சை அளிக்க முடியும் என்ற முடிவின்படி சிறுவனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவன் புகழேந்திக்கு மூளைக்கு அருகில் குண்டு பாய்ந்துள்ளதுளதையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதையும் அறிந்த சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள் புதுக்கோட்டை திருச்சி சாலையில் நார்த்தாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ALSO READ | இளைஞர் சுட்டு கொலை; தென் தமிழகத்தில் தலை தூக்குகிறதா துப்பாக்கி கலாச்சாரம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR