குடிநீர் தேவைக்காக வைகை அணை திறக்க முதல்வர் உத்தரவு!

விவசாயப் பெருமக்கள் மற்றும் வைகை ஆற்றுப் பகுதி 1-ஐ சார்யத கிராம மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்!

Updated: Dec 19, 2017, 01:04 PM IST
குடிநீர் தேவைக்காக வைகை அணை திறக்க முதல்வர் உத்தரவு!
Pic Courtesy: @CMOTamilNadu

வைகை பூர்வீக பாசனப் பகுதி வேளாண் பெருமக்களின் கோரிக்கையின் படி வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"வைகை அணையிலிருந்து வைகை பூர்வீக பாசனப் பகுதி 1-ன் ஆயக்கட்டு பகுதிக்கு குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றுப் படுகையினை நனைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வயதுள்ளன. 

வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று வைகை அணையிலிருந்து வைகை பூர்வீக பாசனப் பகுதி 1-ன் ஆயக்கட்டுப் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றுப் படுகையினை நனைக்கும் வகையில் 349.06 மில்லியன் கன அடி தண்ணீரினை 20.12.2017 முதல் திறயது விட நான் ஆணையிட்டுள்ளேன். 

மேலும், விவசாயப் பெருமக்கள் மற்றும் வைகை ஆற்றுப் பகுதி 1-ஐ சார்யத கிராம மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என தெரித்துள்ளார்.