முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் விற்கப்படும் டீ விலையை கண்டு வியந்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விற்கப்படும் டீ விலையை கண்டு வியந்து அது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது...!
At Chennai Airport Coffee Day I asked for tea. Offered hot water and tea bag, price Rs 135. Horrified, I declined. Was I right or wrong?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 25, 2018
சென்னை விமானநிலையத்தில் உள்ள காபி டேவில் நான் ஒரு டீ கேட்டேன். ஆனால், அவர்கள் என்னிடம் சூடுநீரையும் டீ-பேக்கையும் கொடுத்து விலை வெறும் ரூ.135 என்றார்கள்.
உடனே நான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா?. காபி விலை ரூ180. இதை யார் வாங்கி குடிப்பார்கள்? என்றேன். அதற்கு அவர்கள் பலர் வாங்கி குடிக்கிறார்கலே என்றனர். அப்போ நான் என்ன காலாவதியானவனா? என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Coffee Rs 180. I asked who buys it? Answer was 'many'. Am I outdated?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 25, 2018
இவரின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.