சென்னை: பிரபல தொழிலதிபரும் (Businessman) அரசியல்வாதியுமான எச்.வசந்தகுமார் (H.Vasanthakumar) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச். வசந்தகுமாரின் கொரோனா தொற்று பரிசோதனைக்கான அறிக்கைகள் நேர்மறையாக வந்துள்ளன. வசந்த குமார், முன்னணி சில்லறை வீட்டு உபகரணங்கள் சங்கிலியான வசந்த் அண்ட் கோ (Vasanth & Co) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி (Congress Party) சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக (Member of Parliamement) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வசந்த குமார் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வரவே அவர்கள் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: தமிழகத்தில் அதிகரிக்கும் COVID-19 உயிரிழப்பு... ஒரே நாளில் 119 பேர் பலி!!
வசந்த குமாருக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), செல்வரசு (நாகை) மற்றும் ராமலிங்கம் (மயிலாதுதுரை) ஆகியோரும் அடங்குவர்.
இதற்கிடையில் திங்களன்று தமிழகத்தில் 5,914 பேர் புதிதாக இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ALSO READ: இன்று 5,914 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது