கட்டுமானத் துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் நெல்லையில் மட்டும் ஒரு மாத காலமாக தொழிலாளர்கள், கட்டிடப் பொறியாளர்கள் என பலரும் புலம்பி வருகின்றனர். எந்தக் கட்டுமானப் பொருட்களும் நெல்லைக்குள் வருவதில்லை என்பதால் இதுகுறித்து அகில இந்திய கட்டுனர் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில் இருந்து சில முக்கியமான பிரச்சனைகளும், குற்றச்சாட்டுகளும், கோரிக்கைகளும்!
மேலும் படிக்க | ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு
வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக கட்டுமான துறை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கட்டுமான பொருட்கள் அசாதாரண விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பணிக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் 30 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து முறையிட்ட பின்னர் அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னால் நடைபெற்ற நெல்லைக் குவாரி விபத்துதான். அதிக அளவில் நெல்லையில் கிடைத்துக் கொண்டிருந்த கட்டுமானப் பொருட்கள் இந்த விபத்துக்குப் பிறகு எந்தப் பொருளும் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.
தற்போது நெல்லை மாவட்டத்திற்கு தேவையான கட்டுமான பொருட்களை வாங்குவதற்கு பக்கத்து மாவட்டத்தை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. அடுத்த மாவட்டத்தை நம்பி பொருட்கள் வாங்க சென்றால் ஒவ்வொரு பொருட்களுக்கும் கெடுபுடி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாவட்டங்களில் தரமான பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே வெளிமாவட்டங்களுக்குச் சென்று இரண்டு மடங்கு விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது.
இதன்காரணமாக, வீடு கட்டி முடித்து ஆனி மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்த இருந்தவர்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்ட நிலையில் ஒரு வாரங்களில் அனைத்தும் சரியாகிவிடும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் படிக்க | குற்றாலம் போற ஐடியா இருக்கா ? - இதை தெரிஞ்சுக்கோங்க..!
கட்டுமான பொருட்கள் கிடைக்காத நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள் எனப் பலர் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உருவாகியுள்ள சிக்கலான சூழலை சரி செய்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய கட்டுனர் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR