கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது..!

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திடவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 10, 2022, 02:10 PM IST
  • கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது
  • தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் முகாம் நடக்கும்
  • பொது சுகாதாரத் துறை உத்தரவு
கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது..! title=

தமிழகத்தில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், கோா்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது. ஒமைக்ரான் பரவலின்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.  இதன் மூலம், சுமார் 4 கோடி பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இவைதவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 92 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

Vaccination camp

தமிழகத்தில் பெரும் பங்காற்றிய சிறப்பு தடுப்பூசி முகாம்கள், இனி வரும் நாள்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக நடத்தப்படும். தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் கண்டறிந்து அதற்கான பணிகளை மேற்கொள்வாா்கள். இதைத் தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா்ந்து தடுப்பூசி வழங்கப்படும். போதிய அளவில் தடுப்பூசி இருப்பு தமிழகத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Vaccination camp

தமிழகத்தில் 1.37 கோடி போ் இன்னும் இரண்டாம் தவணை செலுத்தாமல் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைந்ததால் அலட்சியமாக மக்கள் இருந்துவிட கூடாது என்றும், தடுப்பூசியை தவறாமல் செலுத்தினால்தான் மீண்டும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி ( செலுத்தி கொண்டவர்கள், செலுத்தாதவர்கள்) விவரங்கள் :

மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?

தமிழகத்தில் 49.03 (49,03,129) லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி யையும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10.52 கோடி (10,52,54,742) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில், கோவிஷில்டு - 92.10 லட்சம் டோஸ்ம், கோவாக்சின் - 10.17 லட்சம் டோஸ்ம், கார்பெவாக்ஸ் - 6.85 லட்சம் டோஸ்ம் என நேற்றைய நிலவரப்படி 1.09 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 12 - 14 வயதிற்கு உட்பட்டோரோல் 14.25 லட்சம் (67.23%) டோஸ் தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியை  8.20 லட்சம் (38.04%) பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. வாரம் ஒரு நாள் நடைபெறும் கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டுமே 4 கோடி (4,00,34,268) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது?

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News