இந்தியாவில் மூன்றாவது அலை (Corona Third Wave) அக்டோபர் மாதம் உச்சம் அடையலாம் என கூறப்படும் நிலையில், மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும், தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை இன்று தடுப்பூசி போடும் பணிக்காக நாட்டில் 400 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 முகாம்கள் தற்காலிக முகாம்கள். இவை சம்பந்தப்பட்ட வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு பள்ளிகள் அரசு அலுவலகங்கள், ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், தற்போது, கோவீஷீல்ட் அதிக அளவில் போடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கோவேக்ஸின் பயன்படுத்தப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் (Corona Pandemic) குறைந்து வந்தாலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Also Read | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18,352 ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளது.
Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR