தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்!!
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பீதி பரவியுள்ள நிலையில், தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்... "சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கணணிக்கப்பட்டு வந்த இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு தமிழர்கள் ஆகிய நால்வருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#coronavirus update: 4 passengers (2chinese & 2Tamils)who were isolated & under observation at #StanleyHospital are tested negative for nCoV. 3 are already discharged from hospital & 1 today.The public need not panic as #TNHealth is on full alert & no cases of corona in TN. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) February 9, 2020
ஏற்கனவே மூவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள ஒருவரும் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். மாநில சுகாதாரத்துறை முழு வீச்சில் கண்காணித்து வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை" என அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.