ராசிபுரம் குழந்தை விற்பனை: அமுதா உட்பட 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்

நாமக்கல்லில் குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு ஏழு நாள் காவலில் விசாரிக்க உத்தரவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2019, 02:30 PM IST
ராசிபுரம் குழந்தை விற்பனை: அமுதா உட்பட 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் title=

நாமக்கல்: குழந்தை விற்பனை வழக்கில் ராசிபுரம் செவிலியர் அமுதவள்ளி, கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள் ஜோதி ஆகிய மூன்று பேரை 7 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள் ஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையே வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் இருவரும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Trending News