புரெவி புயல்: இன்று மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

புரெவி புயல் காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2020, 10:57 AM IST
    1. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை
    2. 23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி
    3. நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது
புரெவி புயல்: இன்று மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி! title=

புரெவி புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார புறநகர் பகுதிகள் பரவலாக இன்று முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியில் (Chembarambakkam Lake) இருந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் 1000 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுவதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. 23.5 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.15 அடியாக இருக்கிறது.

ALSO READ | புரெவி புயல் முன்னெச்சரிக்கை- காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை

ஏற்கனவே நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரியில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படுவதால் காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் வங்கக்கடலில் உருவான புரெவி புயல் (Cyclone Burevi), பாம்பனுக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மன்னாருக்கு 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 120 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புரெவி புயலின் தாக்கத்தால் மன்னார் கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.

ALSO READ | Cyclone Burevi: தமிழகத்தை நெருங்கும் புரெவி புயலால் பலத்த காற்று

வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால் தென் தமிழகத்தில் பலத்த காற்று வீசுகிறது, கனமழையும் பெய்கிறது. பாம்பனை (Pambanமையம் கொண்டு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் கணிப்பு வெளியிட்டிருந்தது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News