தருமபுரம் ஆதீன மடத்தின் 26-வது மடாதிபதி முக்தி அடைந்தார்...

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தின் 26-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முக்தி அடைந்தார். 

Last Updated : Dec 4, 2019, 05:23 PM IST
தருமபுரம் ஆதீன மடத்தின் 26-வது மடாதிபதி முக்தி அடைந்தார்... title=

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தின் 26-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முக்தி அடைந்தார். 

கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பழைமையான சைவ ஆதீனங்களின் ஒன்றாக கருதப்படும் தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணியளவில் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

தமிழ் மேல் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தன்னுடைய சைவப் பணிகளோடு கல்விப் பணியையும் ஆற்றியவர். தமிழ் பக்தி இலக்கியத்தால் வளர்ந்ததை தெளிவாக அனைவருக்கும் எடுத்துச் சொல்லிய தருமபுர ஆதீனகர்த்தர் மறைவு தமிழ் ஆர்வளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

Trending News