First Indigenous Antibiotic: நுரையீரலை பாதிக்கும் நிமோனியா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்தினை தயாரித்து இந்தியா ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டின் முதல் உள்நாட்டு ஆண்டிபயாடிக் 'நாஃபித்ரோமைசின்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான வோக்கார்ட் மூலம் 'மிக்னாஃப்' என்ற பிராண்டின் கீழ் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
நாஃபித்ரோமைசின் என்பது கடுமையான பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட மேக்ரோலைடு ஆண்டிபயாடிக் ஆகும். இது குறிப்பாக பெரியவர்களை பாதிக்கும் நிமோனியா பாக்டீரியா (CABP) சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முறை என மூன்று நாட்கள் முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும் என்பது இதன் சிறப்பு. வழக்கமாக பயன்படுத்தப்படும் மர்நுதுகள் பலனளிக்காத நிலையில், இந்த புதிய மருந்து நுரையீரலில் காணப்படும் நீண்ட கால பாதிப்புகளை நீக்குவதில் மிக விரைவாகவும் பயனுள்ளதாகவும் செயல்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நிமோனியா நோய்த்தொற்று ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், அதிக அளவிலான பாதிப்புகள் காணப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள 23% நிமோனியா நோயாளிகளுக்கு வழக்கமாக பயன்படுத்தும் மருந்துகள் பலனளிக்காமல் போகின்றன. இந்நிலையில், இந்த சவாலை எதிர்கொள்ள நாஃபித்ரோமைசின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
500 கோடி முதலீட்டுடன் 14 வருட கடின உழைப்பு
14 ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ரூ.500 கோடி முதலீட்டில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. நாஃபித்ரோமைசினின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடத்தப்பட்டன, இதில் இந்த மருந்து அசித்ரோமைசினை விட பத்து மடங்கு அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டிய பயாடிக் மருந்தின், குனப்படுத்தும் திறனின் விகிதம் 96.7% என்ற அளவில் இருப்பதும், குறைந்தபட்ச பக்க விளைவுகள் மற்றும் உணவுடன் அல்லது உணவு இல்லாமலேயே எடுத்துக்கொள்ளும் வசதி கொண்டதாகவும் இருப்பதால், இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்
மேலும் படிக்க | மூளையை பாதிக்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள்... மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை
நிபுணர்கள் கூறும் கருத்து
நிமோனியா தொற்றை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு கடுமையான எதிர்ப்பை காட்டும் நிலையில், அதற்கு சிகிச்சையளிப்பதில் நாஃபித்ரோமைசின் புரட்சியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். இருப்பினும், எதிர்காலத்தில் இதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகாமல் இருக்க, அதை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து என்பதால், இது மலிவு விலையிலும் எளிதாகவும் கிடைக்கும்.
தற்போதுள்ள மருந்துகளால் எந்தப் பலனையும் பெற முடியாத லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு இந்த ஆண்டிபயாடிக் நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், அதன் தவறான பயன்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கமான மருந்துகள் தோல்வியுற்றால் மட்டுமே நாஃபித்ரோமைசின் பயன்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... தக்காளி சூப் தினமும் குடிங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ