கார் விபத்தில் சிக்கிய விக்ரமின் மகன் துருவ் விக்ரம்!

நடிகர் விக்ரமின் மகன் துருவ்,  இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே இன்று காலை துருவ் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. 

Last Updated : Aug 12, 2018, 11:36 AM IST
கார் விபத்தில் சிக்கிய விக்ரமின் மகன் துருவ் விக்ரம்!  title=

நடிகர் விக்ரமின் மகன் துருவ்,  இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே இன்று காலை துருவ் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோரம் இருந்த ஆட்டோக்கள் மீது மோதியுள்ளது. இதில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. 

நிறுத்தாமல் சென்ற அந்த கார் காவல் ஆணையர் வீட்டருகே இருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் துருவ் குடி போதையில் கார் ஓட்டி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட இருபிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். 

Trending News